Powered By Blogger

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

Personal Finance why to be planned?

நிதி திட்டமிடல் ஏன் எதர்காக ? 


நிலை:1) நிதி திட்ட மேலாலருடன் தொடர்பினை நிறுவுதல்

                இங்கு முதலில் நிதி திட்டமிடுபவருடன் ஒரு இணைப்பினை உருவாக்கிகொள்ள வாடிக்கையாலராக தங்களை இனைந்து ஒரு தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். அதுவே இரு தரப்பினருக்கும் இடையே ஒரு புரிதலினை கொண்டுவருகின்றது. இங்கு இரு தரப்பினரும் ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு தேவையான ஆவனங்கள் பரிமாற்றம் பிறதானமான தொடங்கும். இங்கு தான் இயல்பாகவேயே தனக்கு கிடைக்கும் வருவாய் பற்றி தெளிவாக விவாதிக்கப்படும், யார் மூலம் யாருக்கு பணப்பரிவர்த்னை நிகழும் என்பதை. இங்கு இரு தரப்பும் ஒரு வரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, நிண்ட கால நோக்கம் என்கிற அடிப்படையில் தொழில் முறை உறவு, முடிவெடுக்கும் பொருப்பு உள்ளிட்டவை நடைமுறைக்கு உட்படுத்தப்படும்.

நிலை: 2) தகவல் சேகரிப்பு மற்றும் இலக்கு  அமைத்து செயல் படுதல்.

            இங்கு வடிக்கையாலரின் நிதி நிலைத்தன்மையினை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பல் வேறு தகவல்களை விவாதத்திற்கு உட்படுத்தப்படும். இங்கு திட்டமிடுபவர்  தன் முதலீட்டாலருடைய நிதி சார்ந்த குறிக்கோல் மீதான பலன்களை அதிகப்படுத்துவது தொடர்பான விவாதங்கள், ஆலோசனைகள், கடந்த கால அனுபவங்களின் தரவுகள், குடும்ப உறுப்பினர்களின் கல்வி, திருமணம், கணவன்-மனைவி வயோதிக கால திட்டமிடல், மற்ற இலக்குகள், உடல் நிலை சார்ந்த தரவுகள் உள்ளிட்டவைகள் விவாதத்தின் தளங்களாக இருக்கும். இந்த விவாத்தின் போது வாடிக்கையாலருடைய உணர்வு பாதிக்கப்படாத வகையில் சிக்கல்கலுக்கான திர்வு பரிந்துரைக்கப்படும். இங்கு அவசியமான அனைத்து ஆவனங்களும் வாடிக்கையாலர் இடமிருந்து பெற்று அவனப்படுத்தப்படும்

 

நிலை: 3) பொருளாதார சிக்கல்களை இணங்கானுதல்.

            இங்கு நிதி திட்டமிடுபவர் வாடிக்கையாலரிடமிருந்து ஏற்கனவேயே பெறப்பட்ட தகவல்களை நன்கு பரிசிலித்து / ஆராய்ந்து முதலீட்டாலருடைய தற்பொழுதைய நிதி நிலையில் இருந்துகொண்டு தனது இலக்குகளை அடைவதற்கான தீர்க்கமான வழியினை கண்டறிவார். உண்மையில் ஒரு நிர்வாக தலைமை தன் முடிவின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாக தன் தேவை என்ன? என்பதை இணங்காண மொத்த சொத்து மதிப்பு, கடன், பணப்புழக்கம், மொத்த காப்பீடு, முதலிடுகள் மற்றும் வரி அனுகூலங்கள் இவைகளை கொண்டு கணக்கிடப்படும்.

நிலை: 4) நிதி திட்டம் உருவக்கமும் சமர்ப்பித்தலும் பின் பரிந்துரைத்தலும் மற்ற மாற்று வழிகளும்.

            ஒரு முழு நேர நிதிதிட்டமிடுபவர் தன் வாடிக்கையாலரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இருந்து தான் தயாரித்த இலக்குகளை( உம்: கல்வி, ஓய்வுகால பலன்கள்) சார்ந்த நிதி திட்ட முன் வரைவினை நிர்வாக தலைமையிடம் ஒப்படைப்பார். ஒரு நிதி திட்ட நிபுனர் தன் சார்பாக முதலீட்டாலரின் எதிர்பார்ப்புக்கு ஒரு படி அதிகமாகவேயே தனது பரிந்துரையினை வழங்குவார். இதன் மூலம் ஒரு குடும்ப நிர்வாகம் தன்னை சார்ந்த குடும்பத்திற்கு தேவையான நேரத்தில் தேவையான முடிவு எடுப்பதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்ளூம். இங்கு நிதி திட்ட மேலாலராக இருப்பவர் தன் முதலீட்டாலருக்கு ஏதேனும் மாற்று கருத்து அல்லது தயக்கம் இருப்பின் அதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்கி தெளிவுபடுத்துவார்.

 

நிலை: 5) நிதி திட்ட பரிந்துரையினை நடைமுறை படுத்துதல்.

            இங்கு வாடிக்கையாலரும் நிதி திட்டமிடுபவரும் ஒரு ஒப்பந்தத்துக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பரிந்துரைகளை கடைபிடிக்க முன் வருவார்கள். நிதி திட்டமிடுபவர் ஒரு கோச் போண்று மேலே குறிப்பிட்ட அனைத்து பரிந்துரைகள் மற்றும் அது சார்ந்த அனைத்து செயல் முறைகளிளும் தன்னுடைய பங்களிப்பினை ஒரு மருத்துவரும் நோயாளியை போல அல்லது மாணவனும் ஆசிரியரும் போல கடைபிடிப்பார்.

நிலை: 6) நிதி திட்ட வரைவுகளை கண்கானித்தல் மற்றும் பரிந்துரைகள்.

            வாடிக்கையாலரும் நிதி திட்டமிடுபவரும் தாங்கள் மேற்கொண்ட இந்த வரைவுகளை யார் எப்படி எவ்வாறு நிர்வகிப்பது நிர்வாக செலவு என்ன என்பதில் இங்கு உடன்பட்டுக் கொள்ளுதல் அவசியம். இவ்வாறு உடன்பட்டால் மட்டுமே இலக்கினுல் பயனிக்கும் பாதையும் தெளிவாகும் பயனிக்கும் நேரம், வழி செலவு, புதிய இலக்குகள், பொருளாதார சூழ்நிலைகள் உள்ளிட்ட இதர பரிந்துரைகளை கண்கானிக்க ஏதுவாக இருக்கும். இடையில் ஏதேனும் மாற்றங்கள் செய்து கொண்டு பயனத்தை இடை நிறுத்தாமல் தொடர்வதற்கு ஏற்படுத்தப்படும் கடமைப்பே நிதி திட்டமிடல்.

 

தீர்மானம்:

நிதி திட்டத்தால் ஏற்படும் பலன்கள் என்னென்ன ?

1.     பண நிர்வாகம் சிறப்படையும்

2.     பணப்புழக்கம் அதிகரிக்கும்

3.     வருமான வரி செலவுகளை குறைக்க முடியும்

4.     ஓய்வு கால செலவுகளுக்கான திட்டமிடல் சாத்தியம்.

5.     கல்வி செலவுக்குரிய பணத்தை முன் கூட்டியே வகைபடுத்த முடியும்.

6.     முதலீட்டு திட்டங்களின் செயல் திறன்களை ஊக்குவிக்க முடியும்.

7.     ஆபத்தான முதலீட்டு திட்டங்களில் இருந்து வெளியேற முடியும்.

8.     காப்பீட்டு செலவுகளை பெருமளவு குறைக்க முடியும். பல்வேறு நிதி சார்ந்த பரிந்துரைகளுடன் பயனிக்க முடியும்.


----

சுபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Real Estate a View

நிலத்தின் மீதான முதலீடு ஒரு பார்வை   சில நாட்களுக்கு முன் நான் என் நன்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிடுந்த போது அவர் என்னிடம் தான் 2000-ஆம் ஆ...